உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலி குழாய் பொருத்தும் பணியில் சிக்கல்

நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலி குழாய் பொருத்தும் பணியில் சிக்கல்

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் குழாய் பொருத்தும் பணியில் சிக்கல்தொடர்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.விருதுநகர் நகராட்சியில் பிட்டர் பணியிடத்தில் வேலைபார்த்தவர் ஜூலை 31ல் ஓய்வு பெற்றார். ஓராண்டுக்கு முன் வரை 2 பிட்டர் பணியிடங்கள் இருந்த நிலையில் நகராட்சியின் பணியிடங்கள் வரன்முறை செய்யப்பட்ட பின் தேர்வு நிலை நகராட்சியான விருதுநகருக்கு ஒரே ஒரு பிட்டர் என அறிவிக்கப்பட்டது. இருவர் பணிபுரிந்த இடத்தில் ஒருவர் பணிபுரியும் போதே பணிகளில் பல்வேறு சிரமங்கள், சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இருந்த ஒரு பிட்டரும் பணி ஓய்வு பெற்று விட்டார். இந்நிலையில் புதிய நியமனம் தற்போது வரை இல்லை. இதே நேரம் தான் நகரின் பல்வேறு பகுதிகளில் தாமிர பரணி குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பதிக்கும் போது பாதாளசாக்கடை குழாய்கள் சேதமாவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. பொதுவாக திடீர் குழாய் உடைப்பை பார்வையிடுவது, குழாய் பதிப்பது, புதிய இணைப்புகள் வழங்குவது, பாதாளசாக்கடை இணைப்பு கொடுப்பது, குடிநீரை பம்ப் செய்வது, குளோரின் அளவை உறுதி செய்வது போன்றவை பிட்டரின் பணிகள். கடந்த 14 நாட்களாக பிட்டர் இல்லாமல் நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து வருகிறது. குடிநீர் வினியோகத்தில் சரியான அளவில் குளோரின் கலக்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மாலை நேர மழையால் கலங்கலாக குடிநீர் வரும் நிலையில் மக்கள் யோசித்து சற்று தயக்கத்துடன் தான் குடிநீரை பயன்படுத்துகின்றனர். புதிய குழாய் பொருத்தும் பணிகளிலும் தாமதம், சுணக்கம் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு தேவையான பிட்டர் பணியிடத்தை விரைந்து நிரப்ப தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். காலிப்பணியிடத்தை விரைந்து நிரப்பினால் மட்டுமே இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை