முப்பழ பூஜை
சேத்துார், ஜூலை 12- சேத்துார் மேற்கு கொள்ளூரணி ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனி மாத முப்படை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை முதல் இரவு வரை அபிஷேக அலங்காரம் பூஜைகள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு 21 வகையான விசேஷ பொருட்களுடன் மா, பலா, வாழை அடங்கிய முப்பழ அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.