உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வன்னியம்பட்டி -- சத்திரப்பட்டி ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

வன்னியம்பட்டி -- சத்திரப்பட்டி ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு ரோடு விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கில் இருந்து சத்திரப்பட்டி வரையிலான ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் விபத்துகளும் தினசரி நடந்து வருகிறது. இதனை தவிர்க்க காலதாமதம் இன்றி ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி, ஹவுசிங் போர்டு, கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, மொட்டமலைபகுதிகளில் ஆண்டு தோறும் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. அதேபோல் கொத்தங்குளம், மொட்டமலை, சத்திரப்பட்டி பகுதிகளில் டெக்ஸ்டைல் மில்கள் அதிகளவில் உள்ளது.இதனால் வன்னியம்பட்டியில் இருந்து சத்திரப்பட்டி வரை தினமும் ஏராளமானோர் டூவீலர்களிலும், ஆட்டோக்களிலும் பயணிக்கின்றனர். கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவில் உள்ளது.ஆனால், ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டும், பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டும் இருப்பதால் டூவீலரில் வருபவர்கள் விபத்தில் காயம் அடைந்து வருகின்றனர். அதிவேகத்தில் வரும் ஆட்டோக்கள் கவிழ்ந்து ஒரு சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் தினமும் டூவீலர் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.இதனை தவிர்க்க வன்னியம்பட்டி விலக்கிலிருந்து சத்திரப்பட்டி வரை ரோட்டின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு விரிவாக்கம் செய்து விபத்து இல்லாத நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி