உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

சாத்துார்:விருதுநகர்மாவட்டம் சாத்துார் அருகே பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.சாத்துார் அருகே கத்தாளம்பட்டி ஊராட்சியில் வி. ஏ. ஓ.,வாக நாரணாபுரத்தை சேர்ந்த முத்தையா, 49 பணிபுரிகிறார். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த குட்டி 41, என்பவர் கத்தாளம்பட்டி ஊராட்சியில் வாங்கிய நிலத்திற்கு பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்தபோது அதற்கு வி.ஏ.ஓ., ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை குட்டியிடம் தந்தனர்.

கைது

நேற்று மாலை 4:30 மணிக்கு குட்டி, அலைபேசியில் வி.ஏ.ஓ.,விடம் ரூபாய் தயாராக உள்ளதாக கூறினார். சத்திரப்பட்டி விலக்கில் நான்கு வழிச்சாலை பாலத்தில் அடியில் வைத்து வாங்கி கொள்வதாக வி.ஏ.ஓ., பதிலளித்துள்ளார். இதன்படி குட்டி அங்கு பாலத்தின் கீழ் காத்திருந்தார். அங்கு வந்த வி.ஏ.ஓ., அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை வாங்கியபோது மறைந்திருந்த டி.எஸ்.பி.ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சால்வன்துரை மற்றும் போலீசார் வி.ஏ.ஓ., முத்தையாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி