உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருமண மண்டபத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருமண மண்டபத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வேப்பங்குளத்தில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மண்டபம் முன்பு திரண்டனர். இக்கிராமத்தில் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து திருமண மண்டபம், வீடுகள், கடைகள், கோயில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடுகள் இடிக்கபட்டது. நேற்று திருமண மண்டபத்தை இடிக்க அதிகாரிகள் தரப்பில் திட்டமிட்டனர். இதனையறிந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள், நேற்று காலை 9:00 மணி முதல் திருமண மண்டபம் முன்பு திரண்டனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் யாரும் வராததால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள், பின்னர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ