| ADDED : மே 19, 2024 11:39 PM
விருதுநகர் : விருதுநகர் -- அருப்புக்கோட்டை ரோட்டில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பல நாள்களாக செயல்படாமல் உள்ளது.விருதுநகர் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்காக நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டது.விருதுநகர் - அருப்புக்கோட்டை ரோட்டில் எம்.ஜி.ஆர்., சிலை சந்திப்பில் விருதுநகரில் இருந்து சாத்துார், அருப்புக்கோட்டை, கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் இப்பகுதி எப்போது போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடமாக உள்ளது.இப்பகுதியில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் பல நாள்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அருப்புக்கோட்டையில் இருந்து மேம்பாலம் ஏறி இறங்கி வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இருப்பது தெரியாமல் வேகமாக வந்து விபத்தில் சிக்குகின்றன. இங்கு போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் முக்கியஸ்தர்கள் வருகையின் போது மட்டுமே போலீசார் ஈடுபடுகின்றனர்.எனவே இங்குள்ள போக்குவரத்து சிக்னலை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.