உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளைபொருட்களை கொண்டு வர பாதை வேண்டும்: --விவசாயிகள் கோரிக்கை

விளைபொருட்களை கொண்டு வர பாதை வேண்டும்: --விவசாயிகள் கோரிக்கை

ராஜபாளையம் : ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் எதிரே புதுக்குளம் கண்மாய் அமைந்துஉள்ளது. அய்யனார் கோயில் ஆற்றின் வரத்து நீரை முதல் பகுதியாக கொண்டுள்ள இக்கண்மாயும் இதனை ஒட்டியும் உள்ள மருங்கூர்,பிரண்டை குளம் உள்ளிட்ட மூன்று கண்மாய்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை முறையான பாதை வசதி இல்லை. புதுக்குளம்கண்மாய் கரையையே சமாளித்து 3 கண்மாய் சாகுபடி பொருட்களையும் மெயின் ரோட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றிய நிலையில் விளைந்த பொருட்களை கொண்டுவர லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வழி இல்லை. மழைக்காலங்களில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருவதால் அரசு சார்பில் பாதை ஏற்படுத்த கோரிக்கை விடுத்துஉள்ளனர். வடிவேலு, விவசாயி: லேசான மழைக்கும் நீர்வரத்து பெரும் இக்கண்மாய் பாசனத்தில் இருந்து நெல், கரும்பு, வாழை, தென்னை விவசாயங்கள் நடைபெறுகிறது முன்பு புதுக்குளம் கரையை ஒட்டி தனியார் கரும்பு ஆலை நிர்வாகத்தினர் சாலை அமைத்து கொடுத்திருந்தனர். கரை பலப்படுத்தும் பணி என அகலமான சாலை சேதப்படுத்தப்பட்டது. தற்போது வரை கனரக வாகனங்கள்கொண்டு விளைந்த பொருட்களை கொண்டுவர சிரமம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் சிறிய வாகனங்களும் செல்ல வழி இல்லை. தீர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ