உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றி புகுந்து சேதம்

மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றி புகுந்து சேதம்

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அடுத்த சிவலிங்காபுரம், வடகரை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளத்தை காட்டுபன்றிகள், முள்ளம் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அருகே வடகரை, தென்கரை, லட்சுமியாபுரம், சிவலிங்காபுரம், நரிக்குளம் கிராமங்களை சுற்றி நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பிரதான பயிராக உள்ளது. மக்காச்சோள பயிர்களை நடவு செய்து இரண்டு மாதங்களாக பராமரிப்பு செய்து விளைச்சல் கண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இரவில் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்விடமாக உள்ள காட்டு பன்றிகள், முள்ளம் பன்றிகள், மயில் உள்ளிட்ட பறவைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்து வளர்த்த பயிர்கள் காட்டு பன்றிகள் பெருக்கத்தால் சேதமாகி வருகிறது. தண்ணீர் வளம் குறைந்த இப்பகுதிகளில் மாற்று பயிருக்கு வழியில்லாத நிலையில் இப்பிரச்னை குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ