உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் கேட்டு பெண்கள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட கொளுஞ்சிபட்டியில் மூன்று மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பெண்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கொளுஞ்சி பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களாக குடிநீர் சப்ளை கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தினமும் ஒரு குடம் குடிநீர் ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கிராம மக்களை, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த பொறுப்பு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக பிரச்சனையை சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ