மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
23-Feb-2025
காரியாபட்டி : காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நலம், மகளிர் உரிமைத்துறை இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம், நிறுவனர் முகமது ஜலீல் தலைமையில் நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி வரவேற்றார். ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார். குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா, தாசில்தார் மாரீஸ்வரன், தேர்வுத்துறை தலைவர் முரளி கண்ணன், பேராசிரியர்கள் சிவபாரதி, லட்சுமணராஜ், கார்த்திக்குமார், மகளிர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயசாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் பொண்ணுலட்சுமி நன்றி கூறினார். ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணைவேந்தர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் சாம்சன் நேசராஜ் முன்னிலை வகித்தனர். பேராசிரியை பாண்டிய ராஜம்மாள் வரவேற்றார். பல்கலைக்கழக மேம்பாட்டு குழு தலைவர் கல்பனா ஆண்டறிக்கை வாசித்தார். மதுரை சுய தொழில் முனைவோர் மகாலட்சுமி பேசினார். பேராசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.
23-Feb-2025