உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  விருதுநகர், ஜூலை 15–       பெட்ரோல், டீசல், காஸ் விலையை  கட்டுப்படுத்துவது, மின்சார பஸ்களை தனியார்மயமாக்குவதை கைவிடுவது,  13 ஆண்டுகளாக  உயர்த்தாமல் உள்ள ஆட்டோக் கட்டணத்தை உயர்த்துவது, ஆன்லைன் அபராதத்தை கைவிடுவது, டோல்கேட் கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட  16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சி.ஐ.டி.யு., ஆட்டோ, வேன் தொழிலாளர்கள் சங்கம்,  அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம், சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி செல்வக்குமார் தலைமை வகித்தார்.  நிர்வாகி விஜி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் தேவா பேசினார்.  பொருளாளர் எ கார்மேகம்,  நிர்வாகிகள் வேலுச்சாமி,  ராமர்,  பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை