உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 13 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

13 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

அருப்புக்கோட்டை, செப்.7- அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி என்.ஜி.ஓ., காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமை போலீஸ் வினோத் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 13 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. டிரைவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மதுரை சிந்தாமணியை சேர்ந்த அஜித்குமார்,20, என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர். ___


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி