உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2024ல் லஞ்ச ஒழிப்பு பிரிவில் 14 வழக்குகள்: ரூ.2.70 லட்சம் பறிமுதல் ரூ. 2.70 லட்சம் பறிமுதல்

2024ல் லஞ்ச ஒழிப்பு பிரிவில் 14 வழக்குகள்: ரூ.2.70 லட்சம் பறிமுதல் ரூ. 2.70 லட்சம் பறிமுதல்

விருதுநகர்,; லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறியதாவது: மாவட்டத்தில் 2024ல் மக்களிடம் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் வி.ஏ.ஓ., பி.டி.ஓ., மின்வாரிய உதவி பொறியாளர், நகர் ஊரமைப்பு இன்ஸ்பெக்டர், உணவு பாதுகாப்பு அலுவலர், ஊராட்சி தலைவர், சமூக நலத்துறை ஊர் நல அலுவலர்கள் என மொத்தம் 12 பேர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.மேலும் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் தலைமையில் இரு அரசு அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320 கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து விசாரணை நடக்கிறது. அரசு அலுவலர்கள் முறைகேடுகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மக்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அலுவலர்கள் குறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவில் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஏ.டி.எஸ்.பி., அலைபேசி எண் 94981 05882, இன்ஸ்பெக்டர்கள் 94450 48975, 94981 06118 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ