மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
28-Dec-2024
அரசு பஸ் கண்டக்டர் இறப்பு
31-Dec-2024
விருதுநகர் : விருதுநகர் அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.விருதுநகரில் இருந்து சிவகாசி கவுண்டம்பட்டிக்கு மாலை 6:00 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பாவாலி ரோட்டில் சந்திரகிரிபுரம் அருகே வந்த போது வளைவில் தடுமாறி ஓடையில் ஏறிய போது பஸ் கவிழ்ந்தது. இதில் விருதுநகர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பாண்டிச்செல்வி 35, கிருஷ்ணவேணி 16, ரஞ்சித் 16, முத்தரசி 14, மீனாட்சி 49, ராமதர்ஷன் 14, மாதவன் 13, தீபக்குமார் 16, ஹரிபாலாஜி 12, சத்தியா 24, மீனா 30, லோகேஷ் 12, பத்மஸ்ரீ 13 என 9 மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். சிறு சிறு காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்றனர்.பஸ் டிரைவரான விருதுநகர் கே.உசிலம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதரன் 30, கண்டக்டர் சவுந்திரபாண்டியன் 35 ஆகிய இருவரும் தப்பினர். எம்.பி., மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ., சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். ஆமத்துார் போலீசார் டிரைவர், கண்டக்டரிடம் விசாரிக்கின்றனர்.
28-Dec-2024
31-Dec-2024