எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 1.89 லட்சம்! பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் 14.36 லட்சம் பேர்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்ற வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 521 பேர் இடம்பெற்றுள்ளனர். 1 லட்சத்து 89 ஆயிரத்து 964 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2026 ஜன.1ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி நவ. 4 முதல் நடந்து வந்தது. மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும், நிரந்தர முகவரி மாற்றம், தொடர்பு கொள்ள இயலாதவர்கள், இறப்பு, இரட்டைப் பதிவு இனங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக 1 லட்சத்து 89 ஆயிரத்து 964 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற இயலாத நிலையில் அவர்களது பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பட்டியல்களை பார்த்துக் கொள்ளலாம்.