உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லேபிளில் விவரம், உரிமம் இன்றி உற்பத்தி 1800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்

லேபிளில் விவரம், உரிமம் இன்றி உற்பத்தி 1800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்

விருதுநகர்: சாத்துாரில் மசாலா கம்பெனி ஒன்றில் லேபிளில் விவரம், உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி தயாரிக்கப்பட்ட 1800 கிலோ வரையிலான மிளகாய்த்துாள், பஜ்ஜி போண்டா மிக்ஸ், அஜினமோட்டோ போன்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் சாத்துார் அருகே மசாலா தயாரிப்புக் கூடத்தில் ஆய்வு நடந்தது. இதில் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் சொந்த தயாரிப்பு உணவு பொருளாக தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா மிக்ஸ் 450 கிலோ, குழம்பு மிளகாய்த்துாள் 750 கிலோ, லேபிள் விபரங்களின்றி நான்கு 25 கிலோ டின்களில் இருந்த பெருங்காயமும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மிளகாய் துாள் பாக்கெட்டின் லேபிளில் மட்டும் அஜினமோட்டோ உள்ளது என்று குறிப்பிட்டுள்ள நிலையில், 20 மூடைகளில் 500 கிலோ அளவில் அஜினோமோட்டோ இருப்பு வைக்கப்பட்டிருந்த்தது தெரிந்தது. அந்த 500 கிலோ அஜினமோட்டோவை பறிமுதல் செய்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டது. மொத்தம் 1800 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.முடிவுகள் அடிப்படையில் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ