மேலும் செய்திகள்
தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வலியுறுத்தல்
03-May-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2 மாம்பழ கோடவுன்களை, உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் மம்சாபுரம் ராஜாமணி நாடார் தெருவில் உள்ள மாம்பழம் கோடவுன்களில் ஆய்வு செய்தனர்.ஒரு கோடவுனிற்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும், சட்டத்திற்குபுறம்பான வகையில் மாங்காய் பழுக்க வைத்ததும் கண்டறியப்பட்டது. எனவே 890 கிலோ மாம்பழம் பறிமுதல் செய்து, அவற்றிலிருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அதே பகுதியில் இருந்த மற்றொரு கோடவுனை ஆய்வு செய்ய அதன் உரிமையாளர் ஆஜராகாததால் அதையும் மூடி கதவில் உத்தரவு விவரம் ஒட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர் விசாரணைக்கு ஆஜரான பின், அக்கோடவுன் திறந்து ஆய்வு செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுக்கப்பட்ட பின், வளாகத்தை திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
03-May-2025