மேலும் செய்திகள்
காரைக்குடி 'சிக்ரி'யில் பார்வையாளர் அனுமதி
15-Sep-2025
காரியாபட்டி:அமெரிக்கா ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலகின் முன்னணி அறிவியல் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் எல்சிவியர் நிறுவனம் இணைந்து 2024ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் செல்வராஜ், ஜெபக்குமார் இம்மானுவேல் எடிசன் பெயர்கள் இடம் பெற்றது. மருந்தியல், மருந்தகப் பிரிவில் 2010ம் ஆண்டு முதல் 160 க்கு மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்நாடு, வெளிநாடு ஆய்வுகளில் பேராசிரியர் செல்வராஜ் வெளியிட்டார். இவரது ஆராய்ச்சி கட்டுரைகள், 2700 க்கும் அதிகமான உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் பேராசிரியர் ஜெபக்குமார் இமானுவேல் எடிசன், 2012ம் ஆண்டு முதல் உலோகங்கள், உலோக ஆக்சைடுகள், கார்பன், நானோ துகள்களின் தயாரிப்பு முறைகள், பயன்பாடுகள் குறித்து 125க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டார். இவரது கட்டுரைகள் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த உலக சாதனையை பாராட்டி நிறுவனர் முகமது ஜலீல், இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா பாராட்டினர். படம் உண்டு.
15-Sep-2025