சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் அருகே 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த விஷ்ணுகுமார் 20, என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகாசியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவர் 2023ல் விருதுநகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வச்சக்காரப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் விஷ்ணு குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.