இயற்பியல் தேர்வு 295 பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுபிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. 99 மையங்களில் 21 ஆயிரத்து 513 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 21 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதினர். 295 பேர் தேர்வு எழுதவில்லை.