மேலும் செய்திகள்
பழுதான கேமராக்கள் மாயம் பராமரிக்க நடவடிக்கை தேவை
01-Mar-2025
சிவகாசி: சிவகாசியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பை தீவிரப் படுத்துவதற்காக போலீசார் சார்பில் நகரில் முக்கிய இடங்களில் 299 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சகம் என தொழில் நிறுவனங்களும், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களும் உள்ளன. தொழில் நகரானசிவகாசிக்கு கல்வி, வேலை, தொழில் நிமித்தமாக தினசரி பல ஆயிரம் மக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் குற்ற செயல்களை தடுக்கும்பொருட்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காகவும் பஸ் ஸ்டாண்ட், ரத வீதிகள், பழைய விருதுநகர் ரோடு, கடை வீதிகள் என நகரின் முக்கிய இடங்களில் புதிதாக 113 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து சிவகாசி டி.எஸ்.பி பாஸ்கர் கூறுகையில், சிவகாசி நகரின் முக்கிய ரோடுகள் பஜார் பகுதிகள் மக்கள் நடமாடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் ஏற்கனவே 186 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது கண்காணிப்பை கூடுதலாக்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் 113 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிப்பதுடன், பழைய குற்றவாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியை எளிதாக ஒருங்கிணைக்க முடியும், என்றார்.
01-Mar-2025