உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் பலி

ஸ்ரீவி.,யில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் பலி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வெவ்வேறு சம்பவங்களில் மூவர் உயிரிழந்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சித்தாலம்புத்தூரை சேர்ந்தவர் ராமநாதன் 46, பழபண்ணை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு நேதாஜி ரோட்டில் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்ததில் இறந்தது தெரிந்தது. டவுன் போலீசார் விசாரித்தனர்.வத்திராயிருப்பு அருகே எஸ். ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் குருசாமி மனைவி ஆவுடைபார்வதி 52, உடல்நிலை சரியில்லாத நிலையில் மன வேதனையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரித்தனர்.வத்திராயிருப்பு அருகே கல்யாணி புரத்தை சேர்ந்தவர் செல்வம் 60, விவசாயி, இவர் நேற்று முன்தினம் தனது சகோதரர் மலைராஜ் வீட்டின் மாடியில் படுத்திருந்த நிலையில் சிறுநீர் கழிக்க எழுந்தவர் தூக்க கலக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !