உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அசுத்தமான 360 லிட்டர் பாமாயில் பறிமுதல்

அசுத்தமான 360 லிட்டர் பாமாயில் பறிமுதல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பலகார கடையில் அசுத்தமான 360 லிட்டர் பாமாயிலை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். அருப்புக்கோட்டை- திருச்சுழி ரோட்டில் உள்ள பலகார கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அருப்புக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர், குழுவினர் ஆய்வு செய்தனர். பலகார கடையின் உணவு கூடத்தை ஆய்வு செய்தபோது 360 லிட்டர் பாமாயில் சில்லறையாக லேபிள் விபரங்கள் இன்றி அசுத்தமான கேன்களில் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும் 11 கிலோ அயோடின் கலக்காத சாதாரண உப்பு இருப்பதை யும் ஆய்வு செய்து அலுவலர்கள் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததால் உரிமம் பெறும் வரை கடையை மூட உத்தரவிடப்பட்டது. மார்க்கெட் பகுதி முருகன் கோவில் அருகில் உள்ள எண்ணெய் கடையில் சோதனை செய்யப்பட்டு அங்கு லேபிள் இன்றி இருந்த 195 லிட்டர் பாமாயில் பறி முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி