தங்கை உறவுமுறை சிறுமியை காதலித்தவர் வெட்டிக்கொலை சிவகாசியில் 5 பேர் கைது
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தங்கை உறவு முறையான 16வயது சிறுமியை காதலித்த தமிழரசன் 24, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். எம்.புதுப்பட்டி செவலுாரை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் தமிழரசன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கை உறவு முறை கொண்ட சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியின் சகோதரர் சங்கரபாண்டியன் 22, அவரை கண்டித்துள்ளார். வெட்டிக்கொலை: இப்பிரச்னையில் நேற்று முன்தினம் இரவு சங்கரபாண்டியன் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து தமிழரசனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணையில் சங்கரபாண்டியன், நண்பர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ரஞ்சித் 21, முத்துபாண்டி 22, ஜெய்சங்கர் 21, மணிகண்டன் 22, செல்வம், 25 ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. கிருஷ்ணன்கோவில் அருகே மதுரை ---- கொல்லம் நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழே பதுங்கி இருந்த சங்கரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மணிகண்டனை தேடி வருகின்றனர்.