உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது

பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துார், வச்சக்காரப்பட்டி சுற்றிய பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு திரி பதுக்கல், வெடிகள் இருப்பு வைத்திருந்ததற்காக அசோக்பாண்டி 23, மாரிக்காளை 51, பட்டாசு ஆலை உரிமையாளர் மாரிமுத்து 45, ராமர் 53, மாரியப்பன் 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருத்தங்கல் சேர்ந்தவர் அசோக் பாண்டி. இவர் ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகே பட்டாசு தயாரிக்க தேவைப்படும் 5 குரோஸ் மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்தார்.எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிக்காளை. இவர் கவுண்டம்பட்டி இ-சேவை மையம் அருகே பட்டாசு தயாரிக்க தேவைப்படும் 9 குரோஸ் மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவர்கள் இருவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.மேலகட்டனார்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பொம்மையா புரத்தில் மித்ரா பயர் ஒர்க்ஸ் ஆலையில் அனுமதியின்றி சோர்சா வெடி 1 பெட்டி, சோர்சா வெடி 10 எண்ணம் ஆகியவற்றை மாரிமுத்து, ராமர் ஆகியோர் இருப்பு வைத்திருந்தனர்.நாரணாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன். இவர் கன்னிசேரி பஸ் ஸ்டாப் அருகே பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 15 குரோஸ் வெள்ளைத் திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இவர்கள் மூவரையும் வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி