உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 50 சதவீத போனஸ், கூலி உயர்வு வேண்டும்

50 சதவீத போனஸ், கூலி உயர்வு வேண்டும்

சிவகாசி: தீபாவளிக்கு 50 சதவீத போனஸ், கூலி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் முன்பு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தேவா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாலட்சுமி பொதுச்செயலாளர் பாண்டியன் பொருளாளர் ஜெபஜோதி மாவட்ட துணை செயலாளர் முருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பட்டாசு தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் 50 சதவீதம் வழங்க வேண்டும். பீஸ் ரேட் கான்ட்ராக்ட், எக்ஸ்ட்ரா வேலை செய்யும் தொழிலாளர்கள் என்று சொல்லி போனஸ் வழங்கும் மறுக்கும் பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் கூலி உயர்வுக்கான அரசாணை வெளியிட்டும் இதுவரை கூலி உயர்வு வழங்காத பட்டாசு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடர்ந்து அரசுக்கு எதிராகவும் தொழிற்சாலை ஆய்வகத்துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் ராஜ்குமாரிம் மனு கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி