மேலும் செய்திகள்
105 மதுபாட்டில் பறிமுதல் மூவர் கைது
04-Apr-2025
சாத்துார்: சாத்துார் பழைய டிரங்க் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து, 44.வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்தார்.அவரது வீட்டை போலீசார் சோதனை செய்தபோது 180 மி.லி.,அளவு கொண்ட 28 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது .போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.* வெம்பக்கோட்டை மேலக் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 42.வீட்டில் மதுபாட்டில் விற்றார். போலீசார் அவரது வீட்டில் இருந்து 180. மி.லி., அளவு கொண்ட 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Apr-2025