உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேன்கள் மோதல் 7 பெண்கள் காயம்

வேன்கள் மோதல் 7 பெண்கள் காயம்

விருதுநகர்:சிவகாசி அருகே விஜய் பயர் ஓர்க்சில் பணிபுரிந்த 30 தொழிலாளர்களை வேனில் ஏறி நேற்று மாலை 6:30 மணிக்கு விருதுநகருக்கு வந்து கொண்டிருந்தனர். விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் மருளூத்து விலக்கில் எதிரே வந்த மற்றொரு வேன் வளைவில் திரும்ப முயன்றதில் இரு வேன்களும் மோதியதில் தொழிலாளர்கள் வந்த வேன் கவிழ்ந்தது. இதில் வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த ராதா 45, நாகம்மாள் 70, லட்சுமி 42, மகாராணி 60, ஜோதிமணி 48, முத்துலட்சுமி 43, அய்யனார் நகரைச் சேர்ந்த ஜெயராணி 28, ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை