உறவினர்களை வெட்டிய வாலிபருக்கு7 ஆண்டு சிறை
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சொத்து தகராறில் உறவினர்களை வெட்டிய விஜயகுமாருக்கு 24, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம் தவிர்த்தானை சேர்ந்தவர் சற்குணம் 40, இவரது மனைவி வீரலட்சுமி 34. அதே ஊரைச் சேர்ந்த உறவினர் விஜயகுமார் 24, இருவரது குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. 2023 ஏப்ரல் 3ல் ஏற்பட்ட தகராறில் சற்குணம், அவரது தாயார், மனைவி வீரலட்சுமி ஆகியோரை விஜயகுமார் அரிவாளால் வெட்டினார்.வன்னியம்பட்டி போலீசார் விஜயகுமார், அவரது தந்தை வீராசாமி, தாய் ஈஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் விஜயகுமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 16 ஆயிரம் அபராதம் விதித்தும், அவரது பெற்றோரை விடுதலை செய்தும் நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.