உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 7223 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 7223 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 176 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வை 42,231 பேர் தேர்வு எழுதினர். இதில் 7223 பேர் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்காக 176 மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விருதுநகரில் 27 தேர்வு மையங்களில் 6429 பேர், அருப்புக்கோட்டையில் 25 மையங்களில் 5909 பேர், காரியாபட்டியில் 12 மையங்களில் 2419 பேர், ராஜபாளையத்தில் 28 மையங்களில் 7535 பேர், சாத்துாரில் 16 மையங்களில் 3640 பேர் தேர்வு எழுதினர்.மேலும் சிவகாசியில் 27 தேர்வு மையங்களில் 6998 பேர், ஸ்ரீவில்லிப்புத்துாரில் 20 மையங்களில் 5021 பேர், திருச்சுழியில் 7 மையங்களில் 1236 பேர், வெம்பக்கோட்டையில் 4 மையங்களில் 847 பேர், வத்திராயிருப்பில் 10 மையங்களில் 2197 பேர் என மொத்தம் 42,231 பேர் தேர்வு எழுதினர். இதில் 7233 பேர் தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை