மேலும் செய்திகள்
மின்னல் தாக்கியதில் மூதாட்டி உடல் கருகி பலி
05-Apr-2025
நரிக்குடி : நரிக்குடி பகுதியில் மின்னல் தாக்கியதில் 8 ஆடு, மாடுகள் பலியாகின. நேற்று மதியம் நரிக்குடியில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் கம்பாளி மகாலிங்கத்துக்கு சொந்தமான மாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் மாடு பலியானது. அதேபோல் நரிக்குடி புதையனேந்தலைச் சேர்ந்த ஆறுமுகத்துக்கு சொந்தமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 8 ஆடுகள் பலியாகின. மானூர் ரயில்வே பாலத்தில் தண்ணீர் நிரம்பியதால் மக்கள் கடந்து செல்ல முடியவில்லை. கம்பாளி, ஆதித்தநேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
05-Apr-2025