அழகாபுரியில் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரியில் நேற்று அதிகாலை அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர், கண்டக்டர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். செங்கோட்டை டிப்போ அரசு பஸ் ஒன்று மதுரையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்றது. அதிகாலை 4:15 மணிக்கு அழகாபுரி தனியார் ஓட்டல் அருகில் நான்கு வழிச்சாலையில் வரும்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ், ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் டிரைவர் திருலோக சந்திரன் 39, கண்டக்டர் முத்துப்பாண்டி 30 மற்றும் 6 பயணிகள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டனர். நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.