உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கழிவு நீரில் மிதக்கும் அருப்புக்கோட்டை

கழிவு நீரில் மிதக்கும் அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புதுக்கடை பஜாரில் சிறிய மழையை பெய்தால் கூட மழை நீரும், கழிவுநீரும் கலந்து பஜார் மிதக்கிறது. அருப்புக்கோட்டையில் புதுக்கடை பஜார் வழியாகத்தான் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், கோயில், பல சரக்கு கடைகள், பூக் கடைகளுக்கு மக்கள் வருவர். சிறிய மழை பெய்தால் கூட பஜார் வெள்ள காடாக மாறி விடுகிறது. கடை களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர். பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி ரோட்டின் இருபுறமும் பல லட்சம் ரூபாய் நிதியில் வாறுகால் கட்டியது. வாறுகால்களில் உள்ள அடைப்பை முழுமையாக எடுக்காததால், மழைக் காலத்தில் கழிவு நீருடன் கலந்து பஜாரில் தண்ணீர் ஓடுகிறது. நேற்று முன்தினம் மாலை பெய்த சாரல் மழையில் மழைநீர் வாறுகாலில் செல்ல வழி இல்லாமல் கழிவுநீருடன் கலந்து பஜாரில் ஓடியது. லட்சக்கணக்கில் நிதியை செலவழித்தும் பயனில்லை என இப் பகுதி மக்கள் புலம்புகின்றனர். நகராட்சி நிர்வாகம் வாறுகாலில் இருபுறமும் உள்ள அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ