உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வளைவுகளில் குவியும் மண் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள் எச்சரித்தும் அரங்கேறிய விபத்து

வளைவுகளில் குவியும் மண் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள் எச்சரித்தும் அரங்கேறிய விபத்து

விருதுநகர்: விருதுநகரின் நகர, ஒன்றிய பகுதிகளில் வளைவுகளில் குவியும் மண்ணால் சறுக்கி விழுந்து விபத்தை சந்திப்பது அதிகரித்துள்ளது.விருதுநகர் அழகாபுரி ரோட்டில் இருந்து பாவாலி திரும்பும் வளைவில் விபத்து நடப்பதாக நேற்று முன்தினம் தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இப்பகுதியில் பெயருக்கு மண்ணை அகற்றினர். இருப்பினும் தற்போது மீண்டும் விபத்து நடக்கிறது. அதே போல் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் எம்.ஜி.ஆர்., சாலையின் வளைவிலும் மண் அதிகளவில் மேவி உள்ளது. இதனால் திரும்பும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பலர் சாய்ந்து விழுந்து விடுகின்றனர். நேற்று மட்டும் 3 பேர் வரை விழுந்துள்ளனர். இதே போல் ரோட்டில் மண் குவிவதை அகற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காட்டுகிறது.நவ. 10ல் முதல்வர் ஸ்டாலினும், துறை அமைச்சரான எ.வ.வேலும் வந்ததால் அவசரகதியில் விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதி சென்டர் மீடியன்களில் மேவிய மண்ணை அகற்றினர். தற்போது எந்த பணியும் நடக்கவில்லை. மழை நேரம் என்பதால் மண்ணோடு நீர் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிவகாசி ரோட்டில் ஓட்டல் சர்வீஸ் ரோட்டில் விருதுநகர் திரும்பும் வளைவில் மண் குவிந்துள்ளதாலும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.மண் குவிந்துள்ளதை சுட்டி காட்டினால் அவற்றை பெயருக்கு அள்ளாமல் பணி செய்ய வேண்டும். அதே போல் வாகனங்கள் அதிகம் செல்லும் முக்கிய வளைவுகளாக எம்.ஜி.ஆர்., சாலை, ஹோட்டல் அருகே மேவிய மண்ணை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி