உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை கள்ளழகர் கோயில் சீர்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை கள்ளழகர் கோயில் சீர்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று(ஜூலை 28) காலை 9:10 மணிக்கு துவங்குகிறது. இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து நேற்று பட்டு, மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இக்கோயிலில் ஜூலை 20 ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 24 காலை பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 5 கருட சேவை, ஜூலை 26 இரவு ஆண்டாள், ரெங்கமன்னார் சயனசேவை நடந்தது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களை திருச்சி தினமலர் பதிப்பு ஆசிரியர் ராமசுப்பு மனைவி ரேணுகா, மகள்கள் திருச்சி தினமலர் பதிப்பு இணை ஆசிரியர் அபர்ணா, சுசூகி ஷோரூம் நிர்வாகி கிருஷ்ணபிரியா, சுந்தர் பட்டர், தொழிலதிபர்கள் முரளி, சந்திரசேகர், அர்ச்சகர்கள் ஆண்டாள் கோயிலுக்கு கொண்டு வந்தனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். பின் கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல மங்களப்பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மாலை 5:30 மணியளவில் மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி உள்ளிட்டோர் சீர்வரிசை கொண்டு வந்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்க மன்னார் தேருக்கு எழுந்தருகின்றனர். சிறப்பு பூஜைக்கு பின் காலை 9:10 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்குகின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறநிலையத்துறையினர், பட்டர்கள் செய்துள்ளனர். 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை