மேலும் செய்திகள்
இருவர் கைது
2 hour(s) ago
சாப்டூர் மலையில் காட்டுத்தீ
2 hour(s) ago
பட்டாசு ஆலை வேனில் தீ விபத்து
2 hour(s) ago
சாத்துார் நகை கடையில் 5 பவுன் நகை திருட்டு
8 hour(s) ago
பட்டாசு ஆலை வேனில் தீ விபத்து
8 hour(s) ago
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை மேன் ஹோல்கள் மேடு பள்ளங்களாக இருப்பதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. அவற்றை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜபாளையம் பாதாள சாக்கடை பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மேன் ஹோல்கள் ரோடு மட்டத்தை விட மேடு பள்ளமாக உள்ளது. அமைத்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதே நிலை நீடிக்கிறது. இந்நிலையில் புதிய ரோடுகள் இதன் மேல் அமையும் போது அதற்கு ஏற்றார் போல் மேன் ஹோல்களை உயர்த்தாமல் பள்ளமாக விட்டுள்ளனர். இதை கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்திற்கு காரணமாகின்றன. சில இடங்களில் இதன் மூடிகளில் வெளியேறும் கம்பி நீட்டியபடி வாகனங்களின் டயர்களை பதம் பார்க் கிறது. இவற்றை சுலபமாக கண்டறியும் வகையில் வெள்ளை நிற வண்ணம் பூசி அடையாளம் ஏற்படுத்த வேண்டும். ராஜபாளையத்தில் ரயில்வே பீடர் ரோடு, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மாடசாமி கோயில் ரோடு, வெம்பக்கோட்டை ரோடு உள்ளிட்ட மெயின் ரோடுகள் தவிர தெருக்களிலும் பெரும்பாலும் இதே நிலை காணப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு எலும்பு முறிவு, விபத்துகள் ஏற்படுத்தும் பிரச்சனை குறித்து நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago