உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை -- மீதமானவற்றை குவிப்பதால் விபத்து

சாலை ஓரங்களில் கான்கிரீட் கலவை -- மீதமானவற்றை குவிப்பதால் விபத்து

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் சிமெண்ட் ரோடு உள்ளிட்ட பணிகளில் மீதமடையும் கலவையை ரோட்டோரங்களில் கொட்டி செல்வது அதிகரித்துள்ளது.ராஜபாளையம் நகர்ப்பகுதி, ஊராட்சிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய அளவில் ரெடிமிக்ஸ் எனும் கான்கிரீட் கலவை இயந்திரங்கள் மூலம் பணியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மீதமாகும் கலவையை செல்லும் வழியில் ரோட்டோரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்திற்கு சாலையில் வழிவிட இறங்கி ஒதுங்கும்போது இறுகி கிடக்கும் கான்கிரீட் கலவையில் மோதி தடுமாறுவதுடன் விபத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே சிமெண்ட் ரோடு பணிகளும், ஊராட்சிகளில் தண்ணீர் தொட்டி, சிறிய பாலம் உள்ளிட்ட தொடர் பணிகளின் காரணமாக மீதமாவதை முடங்கியார் ரோடு, தளவாய்புரம் ரோடு, தென்காசி மெயின் ரோடு உள்ளிட்ட ரோட்டோரங்களில் ஆங்காங்கு கொட்டி சென்றுள்ளனர்.எனவே இவற்றை தடுக்கும் விதமாக மாற்று வழி காண்பதுடன் பொது இடங்கள் ரோடுகளை ஒட்டி கலவையை கொட்டுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ