உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார், ராஜபாளையத்தில் விபத்துக்கள்: 4 பேர் பலி

சாத்துார், ராஜபாளையத்தில் விபத்துக்கள்: 4 பேர் பலி

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார், ராஜபாளையத்தில் நடந்த விபத்துக்களில் இரு பெண்கள் உட்பட 4 பேர் பலியாயினர். சாத்துார் மேல காந்திநகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் 49. ஆக.,6 ல் இரவு 9:40 மணிக்கு சாத்துார் -கோவில்பட்டி நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சைக்கிளில் சென்ற போது எதிரில் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்த லோடு ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். * வெம்பக்கோட்டை கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் இஸ்ரவேல், 74. ஆக.,7ல் காலை 11:00 மணிக்கு டூவீலரில் மடத்துப்பட்டி சென்றபோது எதிரில் கொட்டமடக்கிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் 35, ஓட்டி வந்த டாரஸ் லாரி மோதியது. இஸ்ரவேல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். * ராஜபாளையம் அருகே தலவாய்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. மனைவி ஜோதி மீனாவுடன் 40, டூவீலரில் ராஜபாளையம் வந்து கொண்டிருந்தார். தென்காசி ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது தேவதானத்தில் இருந்து ராஜபாளையம் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் மாரிமுத்து டூவீலரின் பக்கவாட்டில் இடித்தது. பின்னால் அமர்ந்திருந்த ஜோதி மீனா நிலை தடுமாறி கீழே விழுந்தது பலியானார். மாரிமுத்து காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். * சங்கம்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பொன்வேல் மனைவி வேலுத்தாய் 45, ராஜபாளையத்திற்கு சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சத்திரப்பட்டி ரோடு ஆண்டாள் நகர் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் உடல் நசுங்கி பலியானார். பஸ் டிரைவர்கள் ஈஸ்வரன், வைரவனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை