தரமற்ற விதைகளை விற்றால் நடவடிக்கை
விருதுநகர்: தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி எச்சரிக்கை விடுத்தார்.உப்பத்துார், ஏழாயிரம்பண்ணை, சிவகாசி பகுதிகளில் உள்ள அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 554 விதைகளுக்கு விற்பனை தடை விதித்தார்.விவசாயிகள் அரசிடம் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை ரசீதுடன் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் போது விதை ஆய்வாளர்கள் ஸ்டீபன்ராஜாசிங், அபர்ணா, மாணிக்கராஜ், பிரியங்கா உடனிருந்தனர்.