உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் திருவிழாக்களில் மின்சார விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

கோயில் திருவிழாக்களில் மின்சார விபத்துக்களை தவிர்க்க அறிவுரை

விருதுநகர் : மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா செய்திக்குறிப்பு: திருவிழா நடக்கும் கோயில்களில் மைக்செட், அலங்கார விளக்குகள் அமைக்கும் போது கோயில் மின் இணைப்பில் ஆர்.சி.டி., பொருத்தி மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும். திருவிழாவிற்காக அலங்கார பந்தல், மைக்செட், அலங்கார விளக்குகள் அமைக்கும் போது மேல்நிலை மின்சார கம்பிகளில் இருந்து போதுமான இடைவெளி விடுவதை உறுதி செய்ய வேண்டும்.திருவிழாக்கள், கோயில் கொடை நிகழ்ச்சிகளில் தேர் பவனி, சப்பரம் துாக்கும் போது எக்காரணம் கொண்டும் மின்கம்பிகளை கம்பினாலோ, இதர பொருட்களினாலோ துாக்குவதை தவிர்க்க வேண்டும். தேர் பவனி, சப்பரம் துாக்கும் நிகழ்வுகளில் திருவிழா கமிட்டியினர் தேர் சப்பரத்தின் உயரம் குறித்த விவரங்களையும், அவை சுற்றி வரும் தெருக்கள், பாதைகள் குறித்து விபரங்களையும் 10 நாட்களுக்கு முன்பே அப்பகுதி மின்வாரிய பொறியாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்து பாதுகாப்பான தேர், சப்பர பவனியை உறுதி செய்ய வேண்டும். விழாக்களுக்கு தேர் பவனிக்கு ஜெனரேட்டர் பயன்படுத்தும் பட்சத்தில் உரிய தீ தடுப்பு சாதனங்களை வைத்திருக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை