உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  முகவர் பயிலரங்கம்

 முகவர் பயிலரங்கம்

சாத்துார்: சாத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ஜ., ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்கம் நடந்தது. தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் நடந்து வரும் நிலையில் இதில் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பயிலரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. சட்டசபை தொகுதி அமைப்பாளர் மாரி கண்ணு தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார் பேசினார். மண்டலத் தலைவர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், கோபாலகிருஷ்ணன், பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ