உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜன.22 முதல் பிப்.1 வரை  வேளாண் கண்காட்சி

ஜன.22 முதல் பிப்.1 வரை  வேளாண் கண்காட்சி

விருதுநகர்; மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் ஜன. 22 முதல் பிப். 1 முடிய காலை 9:00 முதல் மதியம் 1:00 வரை வரை நடைபெற உள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்துார் வட்டாரம் சார்பில் ஜன.22 வி.பி.எம்.எம்., கலை கல்லுாரி வளாகத்திலும், சிவகாசி, வெம்பக்கோட்டை வட்டாரம் சார்பில் ஜன.23ல் அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்திலும், வத்திராயிருப்பில் ஜன. 24ல் கலசலிங்கம் பல்கலை வளாகத்திலும், அருப்புக்கோட்டை வட்டாரம் சார்பில் ஜன. 25 தேவாங்கர் கலை கல்லுாரி வளாகத்திலும், சாத்துார் வட்டாரம் சார்பில் ஜன.27ல் கிருஷ்ணசாமி நாயுடு கல்லூரி வளாகத்திலும், விருதுநகர் வட்டாரம் சார்பில் ஜன. 28ல் ஸ்ரீவித்யா கல்லூரி வளாகத்திலும், காரியாபட்டி வட்டாரம் சார்பில் ஜன. 29ல் சேது டெக்னாலஜி இன்ஸ்டியூட் வளாகத்திலும், திருச்சுழியில் ஜன. 30ல் என்.எம்.வி. இன்ஸ்டியூட் ஆக் அக்ரி அண்ட் டெக்னாலஜி கல்லூரி வளாகத்திலும், நரிக்குடியில் ஜன. 31ல் திருச்சுழி அரசு கலை கல்லுாரி வளாகத்திலும், ராஜபாளையத்தில் பிப்.1ல் ராஜூக்கள் கல்லுாரி வாளகத்திலும் நடக்கிறது.அனைத்து வட்டார விவசாயிகளும் பயிர் சார்ந்த ஆலோசனைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்று கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை