அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டம்
சாத்துார்: ' நிச்சயம் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் அதை தலைமை பார்த்துக் கொள்ளும், என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாத்துாரில் பேசினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில் கலந்துகொண்ட கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:தி.மு.க. அரசுக்கு மக்களிடம் ஆதரவு இருப்பது போல சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. இது உண்மை அல்ல.2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெறுவதி உறுதி.தி.மு.க பலவீனமானது ஆனால் அதன் கூட்டணி வலுவானது.நமது கூட்டணி பற்றி நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம் நிச்சயம் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் அதை தலைமை பார்த்துக் கொள்ளும்.மக்களை நாடிச் சென்று அ.தி.மு.க.வின் திட்டங்களை கூறி ஆதரவு திரட்டுங்கள்.உங்களுக்கு உறுதுணையாக நிர்வாகிகள் அனைவரும் துணை நிற்பார்கள். என்றார்.கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, பாஸ்கரன், வைகைச் செல்வன், மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணியன், ராஜவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.