அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விருதுநகர் : விருதுநகரில் தி.மு.க., அமைச்சர் பொன்முடியை கண்டித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தி.மு.க., அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், எம்.எல்.ஏ., மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா, மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.