உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களையும் இணைத்து அரசு துறையாக உருவாக்க வேண்டும்

 அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களையும் இணைத்து அரசு துறையாக உருவாக்க வேண்டும்

விருதுநகர்: அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களையும் இணைத்து அரசு துறையாக உருவாக்க வேண்டும் என விருதுநகரில் பாரதீய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சதீஷ்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில் சுழற்சி முறையில் வழங்கப்படும் பணிகளை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க வேண்டும். தனியார்மயமாக்கலை கைவிட்டு விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன்களுக்கு தேர்வு வைத்து பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளை கடந்தும் இதுவரை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களையும் இணைத்து அரசுத்துறையாக உருவாக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் கட்டுப்பாட்டு பிரிவுகளில் ஆய்வாளர் பணிகளை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை சங்கம் வரவேற்கிறது. தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தப்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை விரைந்து அமலுக்கு கொண்டுவர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ