உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வண்டல் மண் தேவைப்படும்; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்; கலெக்டர் அழைப்பு

வண்டல் மண் தேவைப்படும்; விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்; கலெக்டர் அழைப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்மாய் விவரங்களுடன் பங்கேற்குமாறு கலெக்டர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.விவசாய நிலங்களில் வண்டல் மண் பயன்படுத்தப்படுவதால் மண்ணின் ஊட்டச்சத்து மேம்படுகிறது. மண் புழு இனப்பெருக்கத்தை அதிகரித்து பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது. நீர் தேங்கும் திறன் அதிகரித்து காற்று ஊடுருவலை மேம்படுத்தி, பயிரின் மகசூல் அதிகரிக்கிறது.வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதற்கு உரிய ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இசேவை மையங்கள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற வேண்டும்.அந்த ரசீதுடன், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களின் விவரங்களோடு ஆர்.டி.ஓ.,, கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை