உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : - கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் 1996 - -2000ம் ஆண்டு பேட்ஜ் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் குழு தலைவர் முருகேஸ்வரி வரவேற்றார்.கனடா, அபுதாபி, மஸ்கட், ஆஸ்திரேலியா உட்பட 14 நாடுகளில் இருந்து 150 இன்ஜினியரிங் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.பின்னர் பல்கலைக்கழக வளாகம், வகுப்பறைகள், விடுதிகளை சுற்றி பார்த்து பேராசிரியர்கள், அலுவலர்களோடு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர் முத்துக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னாள் மாணவர் செல்வராஜ் பசுமையான பழைய நிகழ்வுகளைப் பற்றி பேசினார். மாணவர்கள் சார்பில் பல்கலைக்கழகத்திற்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கும் 2 மிஷின்களை மாணவர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ