உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆமை வேகத்தில் அம்ரித் பாரத் திட்ட பணிகள்: ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அவதி

ஆமை வேகத்தில் அம்ரித் பாரத் திட்ட பணிகள்: ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்ட பணிகள் ஆமை வேகத்தில்நடப்பதால் பயணிகள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.இங்கு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிளாட்பார்ம்கள் உயர்த்தி கட்டுதல், நடை மேம்பாலங்கள்அமைத்தல், போதிய அளவு நிழற்குடைகள், இருக்கைகள், மின்விசிறிகள், குடிநீர், சுகாதார வளாகம் லிப்ட், வாகன காப்பகம் உட்பட பல்வேறு வசதிகள் செய்யும் பணிகள் நடந்தன.இதில் பிளாட்பாரம் உயர்த்தி கட்டப்பட்டது. லிப்ட், டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள், நிழற்குடை, இருக்கைகள், மின் விசிறிகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால், ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயில் மற்றும் போர்டிகோவில் தளம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இங்கு குவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் ஸ்டேஷனுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.வாகன காப்பகமும் செயல்பாட்டிற்கு வராததால் ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூர் சென்று திரும்ப சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, ஸ்டேஷன் நுழைவு வாயில் மற்றும் போர்டிகோ பகுதி களில் விரைந்து தளம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை