உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனம் நிறுத்த இடமின்றி தவிக்கும் ஆண்டாள் பக்தர்கள்

வாகனம் நிறுத்த இடமின்றி தவிக்கும் ஆண்டாள் பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.108 வைணவ தலங்களில் ஒன்றானதும், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட கோவில் நகரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மக்கள், வெளிநாட்டு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. மதுரை- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கோயில் கிழக்கு, தெற்கு ரத வீதிகளிலும், மாட வீதிகளில் வீடுகளின் வாசல்களை மறைத்தும் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் நெரிசலும் வாக்குவாதமும் ஏற்படுகிறது. இந்த வாகனங்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுகாதார வளாகங்கள், ஓய்விடங்கள், இருக்கை வசதி என எதுவும் கிடையாது. சபரிமலை சீசனிலும், கோடை விடுமுறையிலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். பார்க்கிங்கால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க திருப்பாற்கடலின் மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தை சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, நவீன சுகாதார வளாக வசதிகள் கொண்ட பார்க்கிங் பகுதியை ஆண்டாள் கோயில் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை