நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் தமிழக அரசின் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது நடந்தது. கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். மகளிர் கல்லூரி செயலர் இளங்கோவன் பேசினார்.விருது பெற்ற ஆசிரியர்கள் சௌந்தர்ராஜன், தாண்டீஸ்வரன் ஆகியோர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். போக்குவரத்து செயலர் விக்னேஷ், கலை கல்லூரி முதல்வர் தில்லை நடராஜன் கலந்து கொண்டனர். பேராசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினார்.